விமானங்களை சரியான நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடம்...!
ஏர் இந்தியா தான் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிறுவனம் என்ற பெருமையை சேர்ந்துள்ளது.
புதுடெல்லி,
பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய நான்கு மெட்ரோ விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமானங்களின் நேர செயல்திறனை சிவில் ஏவியேஷன் கணக்கிட்டது. அதன் அடிப்படையில், விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில்,
விமானங்களை சரியான நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2-ம் இடத்தில் விச்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனமும் கடைசி இடத்தில் கோ பர்ஸ்ட் நிறுவனமும் உள்ளன.
மேலும் இந்தாண்டு உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 9.88 கோடி எனவும், இதன் மூலம் விமானத்துறை 59.16% வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் அக்டோபரில் மட்டும் 1.14 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளதாகவும் டிஜிசிஏ தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த விலை விமான சேவைகளில், ஸ்பைஸ்ஜெட் தனது சந்தைப் பங்கை 7.3 சதவீதத்தில் தக்க வைத்துக் கொண்டது. அதே சமயம் கோ பர்ஸ்ட் செப்டம்பர் மாதத்தில் 7.9 சதவீதமாக இருந்து அக்டோபரில் 7 சதவீதமாக அதன் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.