டெல்லியில் ஒரு வாரத்தில் மோசமடைந்த காற்றின் தரம்


டெல்லியில் ஒரு வாரத்தில் மோசமடைந்த காற்றின் தரம்
x
தினத்தந்தி 22 Oct 2023 3:44 AM GMT (Updated: 22 Oct 2023 8:28 AM GMT)

டெல்லியில் காற்றின் தரம் கடந்த வாரத்தில் இருந்து சீராக மோசமடைந்து வருகிறது.

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த வாரத்தில் இருந்து காற்றின் தரம் சீராக மோசமடைந்து வருகிறது. இதன்படி, ஒட்டுமொத்த காற்று தர குறியீடு இன்று 266 ஆக பதிவாகி உள்ளது.

கடந்த புதன்கிழமை இந்த குறியீடு 83 ஆகவும், வியாழக்கிழமை 117 ஆகவும் இருந்தது. கடந்த வெள்ளி கிழமை இந்த குறியீடு மித அளவில் இருந்தது. தொடர்ந்து மோசமடைந்த காற்றின் தரம் நேற்று 173 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலையில், காற்று தர குறியீடு இன்று தொடர்ந்து மோசமடைந்து உள்ளது என அதுபற்றிய ஆய்வு அமைப்பு சபர் தெரிவித்து உள்ளது.

இதன்படி, டெல்லி இந்தியா கேட்டின் கடமை பாதை பகுதியில், ஒட்டுமொத்த காற்று தர குறியீடு இன்று 266 ஆக பதிவாகி உள்ளது. இது, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் 276 ஆக பதிவாகி உள்ளது.

நொய்டா பகுதியில் இன்னும் மோசமடைந்து 290 (மோசம்) என்ற அளவில் உள்ளது. இவை தவிர, ஆனந்த விஹார் பகுதியில் மிக மோசம் (345) என்ற அளவிலும், ஐ.டி.ஓ. பகுதியில் 309, நியூ மோதி பாக் பகுதியில் 360, துவாரகா செக்டார்-8 பகுதியில் 313 என்றும் பதிவாகி உள்ளது.


Next Story