டெல்லியில் மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்


டெல்லியில் மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்
x

காற்றின் தரக் குறியீடு 400-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. இதனிடையே வட மாநிலங்களில் தற்போது குளிர்காலம் நிலவி வரும் சூழலில், டெல்லி போன்ற பெருநகரங்களில் காற்றின் தரம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் இன்று காற்றின் தரக் குறியீடு (AQI) 400-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக 'காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பிற்கான ஆராய்ச்சி மையம்' (SAFAR) தெரிவித்துள்ளது. இதனால் டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story