ஏர்பஸ் நிறுவனத்துக்கு இந்திய தர உத்தரவாத இயக்குனரகம் ஒப்புதல்


ஏர்பஸ் நிறுவனத்துக்கு இந்திய தர உத்தரவாத இயக்குனரகம் ஒப்புதல்
x

கோப்புப்படம்

ஏர்பஸ் நிறுவனத்துக்கு இந்திய தர உத்தரவாத இயக்குனரகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய விமானப்படைக்கு சி295 ரக போக்குவரத்து விமானங்கள் 56 வாங்குவதற்கு ஏர்பஸ் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. சுமார் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தப்படி 16 விமானங்களை பறக்கும் நிலையில் ஏர்பஸ் நிறுவனம் வழங்கும். மீதமுள்ள 40 விமானங்கள் டாடா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும்.

இந்த மிகப்பெரிய திட்டத்துக்கான ஒழுங்குமுறை அனுமதியை இந்திய ஏரோநாட்டிக்கல் தர உத்தரவாதத்தின் பொது இயக்குனரகம் (டி.ஜி.ஏ.கியூ.ஏ) தற்போது வழங்கி உள்ளது.

இதற்கான சான்றிதழை குஜராத்தில் நடந்து வரும் ராணுவ கண்காட்சியில் நடந்த ஒரு நிகழ்வில் ஏர்பஸ் நிறுவனத்தின் தரத்துறை தலைவர் கஜேதனிடம் டி.ஜி.ஏ.கியூ.ஏ இயக்குனர் சஞ்சய் சாவ்லா வழங்கினார்.

ஒரு வெளிநாட்டு விமான உற்பத்தியாளரின் தர மேலாண்மை அமைப்பு இந்தியாவின் டி.ஜி.ஏ.கியூ.ஏ.யால் அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதன் மூலம் மேற்படி விமானங்கள் தயாரிக்கும் பணிகள் வேகமெடுத்து விரைவில் இந்தியாவுக்கு கிடைக்கும் என பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story