கேரளா: பத்மநாபசுவாமி கோவிலின் சாமி சிலை ஊர்வலத்திற்காக 5 மணிநேரம் மூடப்பட்ட விமான நிலையம்
கேரளாவில் பத்மநாபசுவாமி கோவிலின் சாமி சிலை ஊர்வலத்திற்காக சர்வதேச விமான நிலையம் 5 மணிநேரம் வரை மூடப்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலின் சாமி சிலைகள் ஆராட்டு விழாவுக்காக இன்று மாலை 4 மணியளவில் புறப்பட்டு சென்றன. இந்த ஊர்வலத்தில் திரளான கேரள மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் வழியே சென்றது. பல தசாப்தங்களாக நீடிக்கும், நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மரபானது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக விமான நிலையம் 5 மணிநேரம் வரை மூடப்பட்டது.
அதற்கேற்ப சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் என 10 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் 2 முறை இதுபோன்று நடைபெறும்.
இந்த ஊர்வலம் விமான நிலைய ஓடுபாதை வழியே செல்லும். இதன்படி, மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணிவரை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story