மராட்டிய அரசியலில் திடீர் பரபரப்பு: உடைந்தது தேசியவாத காங்கிரஸ் -அஜித் பவார் ஆளும் கூட்டணியில் இணைந்தார்


மராட்டிய அரசியலில் திடீர் பரபரப்பு: உடைந்தது தேசியவாத காங்கிரஸ்  -அஜித் பவார் ஆளும் கூட்டணியில் இணைந்தார்
x
தினத்தந்தி 2 July 2023 8:54 AM GMT (Updated: 2 July 2023 9:17 AM GMT)

மராட்டியத்தில் ஆளும் கூட்டணி அரசில் எதிர்க்கட்சித்தலைவரான அஜித் பவார் இணைந்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ஏக்நாத்ஷிண்டே உள்ளார். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மராட்டிய எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மராட்டிய கவர்னரை சந்தித்தார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் இணைந்துள்ளார். மராட்டிய துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எட்டு பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவாரின் மகள் சுப்ரியே சுலேவிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ப்பு கொடுக்கப்படதால் அஜித் பவார் அதிருப்தியில் இருந்தார். அண்மையில் கட்சியின் செயல் தலைவர் பொறுப்பில் சுப்ரியா சுலே நியமனம் செய்யட்டார். இதனல், கடும் அதிருப்தி அடைந்த அஜித் பவார் ஆளும் சிவசேனா- பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.



Next Story