அஜித்பவாருக்கு டெங்கு காய்ச்சல், ஓய்வு எடுத்து வருகிறார் - பிரபுல் படேல் தகவல்


அஜித்பவாருக்கு டெங்கு காய்ச்சல், ஓய்வு எடுத்து வருகிறார் - பிரபுல் படேல் தகவல்
x

Image Courtacy: PTI

மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய துணை முதல்-மந்திரியும், என்சிபி தலைவருமான அஜித்பவார் கடந்த வியாழக்கிழமை ஷீரடியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் பங்கேற்றார். அதன்பிறகு நடந்த மந்திரி சபை கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக அவர் கூட்டணி கட்சிகள் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. எனினும் இந்த தகவலை அஜித்பவார் மறுத்தார்.

இந்தநிலையில் அஜித்பவார் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக என்சிபி தேசிய செயற்குழு தலைவர் பிரபுல் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அஜித்பவார் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என ஊடகங்களில் கூறப்பட்டன. சில யூகங்களும் எழுந்தன. அஜித்பவார் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் அடுத்த சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க டாக்டர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அஜித்பவார் பொதுப்பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்டவர். அவர் முழுமையாக குணமடைந்தவுடன் மீண்டும் பொதுப்பணிகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வாா்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story