பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ்சிங் பாதல் ஆஸ்பத்திரியில் அனுமதி
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ்சிங் பாதல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலத்தில் 5 தடவை முதல்-மந்திரியாக இருந்தவர் பிரகாஷ்சிங் பாதல். சிரோமணி அகாலிதளம் கட்சியை நிறுவியவர் ஆவார்.
94 வயதான இவர், நேற்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வாந்தி எடுத்ததை தொடர்ந்து அவர் அங்கு சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் கொரோனா பாதிப்பால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த 6-ந் தேதி, இரைப்பை கோளாறு காரணமாக சண்டிகாரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மறுநாள் வீடு திரும்பினார்.
Related Tags :
Next Story