ஆம் ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த அகந்த் பிரதாப் சிங்
பா.ஜ.க.வில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் சேர்ந்திருந்த நிலையில், மீண்டும் பா.ஜ.க.வுக்கு திரும்பியுள்ளார்.
போபால்,
மத்திய பிரதேசத்தில், வருகிற 17-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், மத்திய பிரதேசத்தில் முழு அளவில் அரசியலில் இறங்குவது என ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.
ஆளும் பா.ஜ.க.வுக்கு போட்டியாக, காங்கிரசும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட பிற தலைவர்கள் முன்னிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அகந்த் பிரதாப் சிங், பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளார்.
கடந்த ஜூனில், பா.ஜ.க.வில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் சேர்ந்திருந்த நிலையில், மீண்டும் பா.ஜ.க.வுக்கு திரும்பியுள்ளார்.
1977-ம் ஆண்டு நடந்த மத்திய பிரதேச சட்டசபைக்கான தேர்தலில் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993-ம் ஆண்டு 10-வது சட்டசபை தேர்தலில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் மந்திரி பதவியையும் வகித்துள்ளார்.