அடுத்த மாதம் முதல் தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகள் பயணிக்கலாம் 15-ந் தேதி முன்பதிவு தொடங்குகிறது

அடுத்த மாதம் முதல் தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகள் பயணிக்கலாம் 15-ந் தேதி முன்பதிவு தொடங்குகிறது
x
தினத்தந்தி 7 Oct 2022 5:00 AM IST (Updated: 7 Oct 2022 5:00 AM IST)
t-max-icont-min-icon

தற்போது, ஏர் இந்தியா விமானங்களில் மட்டுமே செல்லப்பிராணிகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

தற்போது, ஏர் இந்தியா விமானங்களில் மட்டுமே செல்லப்பிராணிகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்தநிலையில், 'ஆகாசா ஏர்' என்ற தனியார் விமான நிறுவனமும் தங்கள் விமானங்களில் செல்லப்பிராணிகளை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்டு 7-ந் தேதி, இந்த நிறுவனம் விமான போக்குவரத்தை தொடங்கியது.

6 விமானங்களை கொண்டுள்ளது. 30 தினசரி சேவைகளை இயக்கி வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் இருந்து விமான சேவையை தொடங்குகிறது. இதையொட்டி, 'ஆகாசா ஏர்' விமான நிறுவன அதிகாரிகள் கூறும் போது, நவம்பர் மாதத்தில் இருந்து 'ஆகாசா ஏர்' விமானங்களில், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய விமான பயணம் அமைய வேண்டும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. செல்லப்பிராணிகள் மீதான பிரியத்தில் இம்முடிவை எடுத்துள்ளோம் என்று கூறினர்.

Next Story