'எலி வளை' சுரங்க தொழிலாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய அகிலேஷ் யாதவ்


எலி வளை சுரங்க தொழிலாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய அகிலேஷ் யாதவ்
x

41 தொழிலாளர்களை மீட்க உதவிய ‘எலி வளை' சுரங்க தொழிலாளர்களுக்கு அகிலேஷ் யாதவ் பாராட்டு விழா நடத்தினார்.

லக்னோ,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். 'எலி வளை' சுரங்க தொழிலாளர்களின் உதவியாலேயே இறுதிக்கட்ட மீட்பு பணி வெற்றிகரமாக அமைந்தது. இதனால் அவர்கள் நாடு முழுவதும் ஹீரோவாக கொண்டாடப்பட்டனர்.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், 41 தொழிலாளர்களை மீட்க உதவிய 'எலி வளை' சுரங்க தொழிலாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தினார்.

தலைநகர் லக்னோவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 'எலி வளை' சுரங்க தொழிலாளர்கள் 14 பேருக்கு சால்லை அணிவித்தும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கியும் அகிலேஷ் யாதவ் பாராட்டினார். மேலும் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்கள் விலைமதிப்பற்றவர்கள் என்று அவர் கூறினார்.


Next Story