குடி பழக்கத்தை விடும்படி கூறியதால் 12-வது ஆக வந்த மனைவியை போதையில் அடித்துக்கொன்ற கணவர்..!


குடி பழக்கத்தை விடும்படி கூறியதால் 12-வது ஆக வந்த மனைவியை போதையில் அடித்துக்கொன்ற கணவர்..!
x

குடிப்பழத்தை விட்டுவிடும் படி கூறிய 12 வது மனைவியை போதையில் கணவன் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் போகராவ் நகரத்தை சேர்ந்த ராம் சந்திர துரி என்பவர் தன்னை குடிக்கவேண்டும் என்று அறிவுரை கூறிய சாவித்திரி தேவியை ஆத்திரத்தில் அடித்து கொன்றுள்ளார். சாவித்ரி தேவி, ராம் சந்திர துரியின் 12வது மனைவி என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

சம்பவத்தன்று ராம் சந்திர துரி குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த மறுபடியும் மது அருந்த ஆரம்பித்துள்ளார். இதனை அவரது மனைவி சாவித்திரி தேவி தடுத்துள்ளார். இதனால் போதை தலைக்கு ஏறிய ராம் சந்திர துரி ஆத்திரத்தில் மனைவியை அங்கிருந்த கட்டையால் தலையில் பலமாக அடித்துள்ளார்.

இதனால் சாவித்ரி தேவி தரையில் நிலைகுலைந்து தரையில் விழுந்துள்ளார். குழந்தைகள் வீடு திரும்பியபோது, தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு உதவி கேட்டு அலறினர். அக்கம் பக்கத்தினர் வீட்டில் திரண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைக்கு பின் ராம் சந்திர துரியை கைது செய்தனர்.

ராம் சந்திர துரிக்கும் சாவித்ரி தேவிக்கும் திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆவதாகவும், இதற்கு முன்னர் ராம் சந்திர துரிக்கு 11 முறை திருமணம் ஆகியுள்ளதாகவும் போகராவ் பஞ்சாயத்து அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், அந்த 11 மனைவிகளும் இவரின் மோசமான குடிப்பழக்கத்தால் இவரை விட்டு சென்றதாகவும் தெரிவித்தனர். எனினும் காவல்துறையினர் இந்த விஷயம் குறித்து தெளிவாக எதுவும் கூறவில்லை.


Next Story