ஆல் தி பெஸ்ட்: இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து


ஆல் தி பெஸ்ட்: இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
x

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

புதுடெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இந்நிலையில், இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-

கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்துகள் டீம் இந்தியா. உங்களை உற்சாகப்படுத்த 140 கோடி இந்தியர்கள் உள்ளனர்.நன்றாக விளையாடுங்கள், நேர்மையான போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தி வெற்றி பெறுங்கள் என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story