43 நாட்கள் நடந்த அமர்நாத் யாத்திரை அமைதியாக முடிந்தது - பக்தர்கள் வருகை குறைவு


43 நாட்கள் நடந்த அமர்நாத் யாத்திரை அமைதியாக முடிந்தது - பக்தர்கள் வருகை குறைவு
x

கடந்த ஜூன் 30-ந் தேதி தொடங்கிய அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை நேற்று அமைதியாக முடிந்தது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை கடந்த ஜூன் 30-ந் தேதி தொடங்கியது. 43 நாட்களாக நடந்த இந்த யாத்திரை நேற்று அமைதியாக முடிந்தது. யாத்திரை நிறைவை குறிக்கும்வகையில், வெள்ளி சூலம் இறுதி பூஜைக்காக குகைக்கோவிலுக்கு வந்து சேர்ந்தது.

இந்த ஆண்டு 6 லட்சம் முதல் 8 லட்சம் பக்தர்கள்வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெறும் 3 லட்சத்து 3 ஆயிரத்து 502 பக்தர்கள் மட்டுமே வந்துள்ளனர்.

காஷ்மீரில் சிறுபான்மையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்ததால், பலத்த பாதுகாப்புக்கு இடையே இந்த யாத்திரை நடந்தது. எந்த அசம்பாவிதமும் இன்றி யாத்திரை முடிந்ததால், பாதுகாப்பு படையினர் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த மாதம் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழையால் 15 பக்தர்கள் பலியான சோகமும் நிகழ்ந்தது.


Next Story