மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் மழை பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் பள்ளத்தாக்கில் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பால்தால் முகாமிலிருந்து பக்தர்கள் அமர்நாத் குகை கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.
இந்தநிலையில், கனமழை மற்றும் மோசமான வானிலையால் பஹல்காம் மற்றும் பால்தால் வழித்தடங்களில் இருந்து யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குகைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வானிலை சீரடைந்த பிறகு யாத்திரை மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, ஜூலை 8 ஆம் தேதி மேக வெடிப்பு ஏற்பட்டு அதில் 16 பேர் இறந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதைத் தொடர்ந்து யாத்திரை 3 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, 11-ம் தேதி பஹல்காம் பாதை வழியாகவும், 12-ம் தேதி பால்தால் பாதை வழியாகவும் மீண்டும் யாத்திரை தொடங்கியது.