கணவர் கொலை வழக்கில் இளம்பெண் கைது: அரசு அதிகாரியை திருமணம் செய்ய தீர்த்து கட்டியது அம்பலம்


கணவர் கொலை வழக்கில் இளம்பெண் கைது: அரசு அதிகாரியை திருமணம் செய்ய தீர்த்து கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:45 PM GMT)

பெங்களூருவில் கணவரை கொன்ற வழக்கில் கைதான இளம்பெண், அரசு அதிகாரியை திருமணம் செய்ய திட்டமிட்டு தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது. மேலும் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

எலகங்கா:

கள்ளக்காதலனுடன், இளம்பெண் கைது

பெங்களூரு எலகங்காவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி ஸ்வேதா (வயது 21). இந்தநிலையில், கடந்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி இரவு சந்திரசேகர் தனது வீட்டின் மாடியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சந்திரசேகரை கொலை செய்ததாக, அவரது மனைவி ஸ்வேதா, கள்ளக்காதலன் சுரேசை எலகங்கா போலீசார் கடந்த வாரம் கைது செய்திருந்தார்கள்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது மாமாவான சந்திரசேகரை பெற்றோர் வற்புறுத்தியதால் ஸ்வேதா திருமணம் செய்ததும், கள்ளக்காதலனும் தனனுடன் கல்லூரியில் படித்தவருமான சுரேசை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், இதன்காரணமாக சந்திரசேகரை கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பரபரப்பு தகவல்களை ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

அரசு அதிகாரியை திருமணம் செய்ய...

அதாவது சந்திரசேகர் சாதாரண வேலைக்கு தான் சென்றுள்ளார். அதன்மூலம் கிடைத்த வருமானம் மூலமாக ஸ்வேதாவால் வசதியாக வாழ முடியவில்லை. ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு ஸ்வேதா ஆசைப்பட்டுள்ளார். அவர் ஆந்திராவில் உள்ள கல்லூரியில் படித்ததால், அங்குள்ள அரசு அதிகாரியுடன் ஸ்வேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து, அந்த அரசு அதிகாரியை திருமணம் செய்ய ஸ்வேதா முடிவு செய்துள்ளார். இதற்கு அந்த அதிகாரியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதற்கு அவருடைய கணவர் இடையூறாக இருந்துள்ளார். இதையடுத்து, கணவரை கொலை செய்ய ஸ்வேதா திட்டமிட்டுள்ளார். இதுபற்றி தனது கல்லூரி காதலான சுரேசிடம் தெரிவித்துள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தனது கணவரை கொலை செய்த பின்பு, சுரேசை திருமணம் செய்துகொள்வதாக ஸ்வேதா ஆசைவார்த்தை கூறியுள்ளார். மேலும் சுரேசுடனும் கள்ளத்தொடர்பை அவர் ஏற்படுத்தி கொண்டார்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை

தன்னுடைய கணவரை சுரேஷ் கொலை செய்தால், அவர் சிறைக்கு சென்று விடுவார். அதன்பிறகு, ஆந்திராவை சேர்ந்த அரசு அதிகாரியை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஸ்வேதா திட்டமிட்டுள்ளார். சுரேஷ் கைதான போது, ஸ்வேதா தான் சந்திரசேகரை கொலை செய்ய தூண்டியதாக போலீசாரிடம் தெரிவித்து இருந்தார். இதன்காரணமாக தான் ஸ்வேதாவையும் போலீசார் கைது செய்திருந்தார்கள்.

இதன்மூலம் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும், அரசு அதிகாரியை திருமணம் செய்ய கணவரை கொலை செய்ய கள்ளக்காதலனை ஸ்வேதா தூண்டியதுடன், திருமண ஆசைகாட்டியதும் தெரியவந்துள்ளது.

கைதான ஸ்வேதா, சுரேஷ் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story