அதிகரிக்கும் கொரோனா.. கேரளாவில் கர்ப்பிணிகள், வயதானோருக்கு முகக்கவசம் கட்டாயம்
எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. கேரளாவிலும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே அதிகரிக்கும் கொரோனாவை கருத்தில் கொண்டு கேரளாவில் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் பிற நோய்கள் உள்ளவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
கேரளாவில் சனிக்கிழமை 1,801 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story