ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மதன்தாஸ் தேவி மரணம்: மத்திய மந்திரி அமித்ஷா நேரில் அஞ்சலி


ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மதன்தாஸ் தேவி மரணம்: மத்திய மந்திரி அமித்ஷா நேரில் அஞ்சலி
x

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மதன்தாஸ் தேவி நேற்று காலமானார். அவருக்கு மத்திய மந்திரி அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புனே,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணை செயலாளராக பணியாற்றி வந்தவர் மதன்தாஸ் தேவி (வயது81). மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ். முழு நேர பிரசாரகராக இருந்த அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூருவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது குடும்பத்தினர் வசித்து வரும் மராட்டிய மாநிலம் புனேக்கு நேற்று உடல் கொண்டு செல்லப்பட்டது. புனே நகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து மதன் தாஸ் தேவி உடல் புனேயில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த மதன்தாஸ் தேவி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story