உத்தரபிரதேசத்தில் 306 மதரஸாக்கள் மாநில மதரஸா வாரியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை - ஆய்வில் தகவல்


உத்தரபிரதேசத்தில் 306 மதரஸாக்கள் மாநில மதரஸா வாரியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை - ஆய்வில் தகவல்
x

சஹாரன்பூர் மாவட்டத்தில் மதரஸா வாரியத்தின் அங்கீகாரம் இல்லாமல் 306 மதரஸாக்கள் செயல்பட்டு வருவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் செயல்பட்டு வரும் மதரஸாக்கள் குறித்து அம்மாநில மதரஸா வாரியம் சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தியது. அதில் சஹாரன்பூர் மாவட்டத்தில் 306 மதரஸாக்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் பாரத் லால் கவு தெரிவிக்கையில், சஹரன்பூர் மாவட்டத்தில் மொத்தம் 754 மதரஸாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு 306 மதரஸாக்கள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

இங்கு செயல்பட்டு வரும் தாருல் உலூம் தியோபாத் நிறுவனமும் மதரஸா வாரியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. அரசு 12 புள்ளிகளை நிர்ணயித்துள்ளது, அதன் அடிப்படையில் மதரஸாக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தாருல் உலூம் தியோபாத், அரசியலமைப்பின் படி கல்விப் பணிகளைச் செய்து வருவதாக அதன் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், தாருல் உலூம் தியோபந்த் கடந்த150 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விப் பணிகளைச் செய்து நாட்டிற்குச் சேவை செய்து வருகிறது, ஆனால் அது அரசாங்கத்திடமிருந்தும் எந்தவிதமான உதவிகளையும் மானியங்களையும் பெற்றதில்லை.

தியோபந்த், மதரஸா வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அது இந்திய அரசியலமைப்பின் படி கல்விப் பணிகளைச் செய்து வருகிறது. தாருல் உலூம் தியோபாத் நிறுவனம் 'ஷுரா சொசைட்டி' சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனம் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கான உரிமையின்படி செயல்படுகிறது. என அவர் தெரிவித்தார்.

தாருல் உலூம் தியோபாத் நிறுவனம் கடந்த 1866 முதல் சஹரன்பூரில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story