அருணாசலபிரதேசத்தில் ராணுவ முகாமுக்கு பிபின் ராவத் பெயர்


அருணாசலபிரதேசத்தில் ராணுவ முகாமுக்கு பிபின் ராவத் பெயர்
x

இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் பணியையும், அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில் கிபிது ராணுவ முகாமுக்கு அவரது பெயரை ராணுவம் சூட்டி கவுரவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் முதல் முப்படை தளபதியான பிபின் ராவத், கடந்த ஆண்டு குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

இவர் கடந்த 1999-2000-ம் ஆண்டுகளில் அருணாசல பிரதேசத்தின் லோகித் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கிபிது ராணுவ முகாமில் கமாண்டராக பணியாற்றினார். அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைந்துள்ள முக்கிய ராணுவ முகாம்களில் இதுவும் ஒன்றாகும்.

நாட்டின் பாதுகாப்பு பணியில் பிபின் ராவத் ஆற்றிய தன்னலமற்ற பணிகள் மற்றும் அவரது வீரத்தையும், அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில் கிபிது ராணுவ முகாமுக்கு அவரது பெயரை ராணுவம் சூட்டி கவுரவித்துள்ளது.

இதற்காக அந்த முகாமில் நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் மாநில கவர்னர் மிஸ்ரா கலந்து கொண்டு, பிபின் ராவத் பெயர் பொறிக்கப்பட்ட வாயிலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான ராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story