பையை திருடிய நபரை தடுத்த பிச்சை எடுக்கும் மூதாட்டி அடித்து கொலை


பையை திருடிய நபரை தடுத்த பிச்சை எடுக்கும் மூதாட்டி அடித்து கொலை
x

மராட்டியத்தில் தூங்கி கொண்டிருந்த பிச்சை எடுக்கும் மூதாட்டியின் பையை திருட முயன்ற நபரை தடுத்து நிறுத்தியபோது, மூதாட்டி அடித்து கொல்லப்பட்டு உள்ளார்.



புனே,


மராட்டியத்தின் மும்பை நகரில் டோபி காட் பகுதியில் 65 வயதுடைய பிச்சை எடுக்கும் மூதாட்டி ஒருவர் அசதியில் தூங்கி கொண்டு இருந்துள்ளார். அவரருகே, பிச்சை எடுக்க உபயோகிக்கும் பழைய பை ஒன்றையும் வைத்திருந்து உள்ளார்.

இந்த நிலையில், அந்த வழியே வந்த நபர் ஒருவர் இதனை கவனித்து உள்ளார். அந்த பையில் நிறைய பணம் இருக்கும் என்ற நினைப்பில், யாருக்கும் தெரியாமல் மூதாட்டியிடம் இருந்த பையை திருட முயன்றுள்ளார்.

ஆனால், அந்த நேரம் மூதாட்டி எழுந்து கொண்டார். அவர் தனது பையை திருட விடாமல் அந்த நபரை தடுத்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், மூதாட்டியை அடித்து, கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் மூதாட்டி உயிரிழந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, மும்பை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அந்த நபர் மீது முன்பே பல்வேறு வழக்குகள் உள்ளன என போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story