கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
பெலகாவியில் கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பெலகாவி:
பெலகாவி மாவட்டம் யரகட்டி தாலுகா தல்லூரா கிராமத்தை சேர்ந்தவர் பாப்பண்ணா அன்னிகேரி (வயது 76). இவரது மனைவி சிவபசவ்வா (70). வயோதிகம் காரணமான நோயால் பாப்பண்ணா அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். தன்னுடன் சுமார் 50 ஆண்டு காலம் வாழ்வில் சேர்ந்த பயணித்த கணவர் இறந்துவிட்டாரே என துக்கத்தில் சிவபசவப்பா கதறி அழுதபடி இருந்தார். அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிவபசவ்வா ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவர் துக்கம் தாளாமல் கதறி அழுததில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களுக்கும் இறுதிச்சடங்கு நடத்தி ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர்.
Related Tags :
Next Story