ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்-மந்திரி அறிவிப்பு


ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்:  முதல்-மந்திரி அறிவிப்பு
x

ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.



விஜயவாடா,


டெல்லியில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆந்திர பிரதேசத்தின் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டார். கூட்டத்தின் ஒரு பகுதியாக அவர் பேசும்போது, வருகிற நாட்களில் விசாகப்பட்டினத்தில் இருந்து அரசு நடவடிக்கைகளை தொடங்க இருக்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், இந்த கூட்டத்தில் விசாகப்பட்டினத்திற்கு வரும்படி உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். வரும் நாட்களில் அதுவே எங்களது தலைநகராக இருக்கும்.

வருகிற மாதங்களில் நான் விசாகப்பட்டினத்திற்கு இடம் பெயர உள்ளேன். வரும் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை விசாகப்பட்டினம் நகரில் நடத்த இருக்கிறோம் என கூறி உள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்க வரும்படி உங்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் அழைக்க நான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறேன். நீங்கள் வருவதுடன் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருக்கும் உங்களது நண்பர்களிடமும் நல்ல முறையில் கூறி, அவர்களும் ஆந்திர பிரதேசத்திற்கு வந்து பார்வையிட்டு, மாநிலத்தில் தொழில் செய்வது எவ்வளவு எளிது என கூற செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

வருங்காலத்தில், விசாகப்பட்டினம் கவர்னரின் இல்லம் ஆகவும் செயல்படும். எனினும், அமராவதியில் இருந்து சட்டசபை நடவடிக்கைகள் தொடர உள்ளன.


Next Story