முதல் மனைவியின் 'இன்ஸ்டா ரீல்சை' பார்த்த கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்த 2வது மனைவி


முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்த கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்த 2வது மனைவி
x

முதல் மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை கணவன் தனது செல்போனில் பார்த்ததை 2வது மனைவி கவனித்துள்ளார்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் முப்பலா கிராமத்தை சேர்ந்தவர் கோட்டா ஆனந்த் பாபு. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்து வீரம்மா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டார். ஆனந்த் பாபுவும் வீரம்மாவும் முப்பலா கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை ஆனந்த் பாபு தனது முதல் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களை பார்த்து ரசித்துள்ளார். கணவன் ஆனந்த் பாபு தனது முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்து ரசிப்பதை கண்டு 2 வது மனைவி வீரம்மா அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கணவன் ஆனந்த் பாபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் வீரம்மா தனது கணவன் ஆனந்த் பாபுவின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார். மனைவியின் செயலால் அதிர்ச்சியடைந்த ஆனந்த் பாபு அலறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஆனந்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story