தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவிப்பு
சாலையை சீரமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஆடுகாடு கிராமம் அருகே உள்ள சாலை மிகவும் சிதிலம் அடைந்து உள்ளது. அந்த சாலையை சீரமைத்து தரக்கோரி தாசில்தார் உள்பட ஏராளமான அதிகாரிகளிடமும், அந்த தொகுதி எம்.எல்.ஏ.விடமும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாலையை சீரமைத்து தரவில்லை என்றால் எதிர்வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆடுகாடு கிராமத்தை சேர்ந்த மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அரசு சார்பில் தரமான சாலைகள் அமைத்து கொடுக்கவேண்டும். இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். மேலும் தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story