நேபாளம்: பசுபதிநாதர் கோவிலை ஊழல் எதிர்ப்பு அமைப்பு கைப்பற்றியது: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு


நேபாளம்: பசுபதிநாதர் கோவிலை ஊழல் எதிர்ப்பு அமைப்பு கைப்பற்றியது: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
x

கோப்புப்படம்

நேபாளத்தில் புகழ்பெற்ற பசுபதிநாதர் கோவிலை ஊழல் எதிர்ப்பு அமைப்பு கைப்பற்றியது. இதனால் அங்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

காத்மாண்டு,

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் மிகவும் பழமையான பசுபதிநாதர் கோவில் உள்ளது. உலகப்புகழ் பெற்ற இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்துக்கு கடந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவின் போது 103 கிலோ எடையில் புதிய தங்க நகை அணிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த 103 கிலோ தங்க நகையில் 10 கிலோ தங்கம் மாயமானதாக கோவில் நிர்வாகம் சமீபத்தில் புகார் தெரிவித்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்துக்கு எடுத்து செல்லப்பட்டதையடுத்து, இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நாட்டின் பிரதான ஊழல் எதிர்ப்பு அமைப்பான 'சிஐஏஏ'வுக்கு அரசு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, 'சிஐஏஏ' அமைப்பு நேற்று பசுபதிநாதர் கோவிலை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கோவிலுக்குள் பக்தர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவ வீரர்கள் உள்பட ஏராளமான பாதுகாப்பு படையினர் கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். கோவில் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடம் 'சிஐஏஏ' அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story