ஜெய்ஷ்-இ -முகமது அமைப்பின் பயங்கரவாதி கைது; உ.பி. போலீசார் அதிரடி
உத்தரபிரதேசத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ,
இந்தியாவின் 75வது சுதந்திரதினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் சுதந்திரதினத்தன்று தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கான்பூரில் பதுங்கி இருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த ஹபிபுல் இஸ்லாம் (வயது 19) என்ற பயங்கரவாதியை அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஹபிபுல் இஸ்லாம் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முகமது நதீம் என்ற பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
பயங்கரவாதி ஹபிபுல் டெலகிராம், பேஸ்புக், டெலகிராம் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து செல்போன் மற்றும் கத்தியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.