அனைவரையும் சமமாக பார்க்காத எந்த மதமும் மதம் அல்ல; அது நோய்தான் - கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே


அனைவரையும் சமமாக பார்க்காத எந்த மதமும் மதம் அல்ல; அது நோய்தான் -  கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே
x
தினத்தந்தி 4 Sept 2023 5:01 PM IST (Updated: 4 Sept 2023 5:37 PM IST)
t-max-icont-min-icon

அனைவரையும் சமமாக பார்க்காத எந்த மதமும் மதம் அல்ல, அது நோய்தான் என கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.

பெங்களூரு,

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கை பற்றி தனது விமர்சனத்தை முன்வைத்தார். சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.

சனாதன கொள்கை பற்றி பேசியதற்காக தன் மீது வழக்குகள் போட்டாலும் அதனை சட்டப்படி எதிர்கொள்வேன். எனது கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். நான் எந்த மதத்திற்கும் எதிர்ப்பாக பேசவில்லை என அமைச்சர் உதயநிதி அண்மையில் தனது விளக்கத்தை அளித்து இருந்தார்.

சனாதன கொள்கை பற்றி திமுக அமைச்சர் உதயநிதி பேசியதற்கு, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கூறுகையில்,

சமதர்ம சமன்பாடு என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. எங்கள் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சியினருக்கும் அவர்களது கருத்துக்களை சொல்ல அனைத்து உரிமையும் உண்டு என விளக்கம் அளித்து இருந்தனர்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்து குறித்து பேசிய கர்நாடக மாநில மந்திரி பிரியங்க் கார்கே,

சமத்துவத்தை ஊக்குவிக்காத, மனிதனாக இருப்பதற்கான கண்ணியத்தை உறுதிப்படுத்தாத எந்த மதமும் தன்னை பொறுத்தவரை மதம் அல்ல. சம உரிமை கொடுக்காத, சக மனிதர்களை சமமாக நடத்தாத எந்த மதமும், நோயை போன்றது தான் என தனது கருத்தை செய்தியாளர்களிடம் பிரியங்க் கார்கே கூறினார்.


Next Story