பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி பதவி தகுதி நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் மேல் முறையீடு - முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேட்டி


பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி பதவி தகுதி நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் மேல் முறையீடு - முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேட்டி
x

பிரஜ்வல் ரேவண்ணாஎம்.பி. பதவி தகுதி நீக்கம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்றுமுன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா கூறியுள்ளார்.

ஹாசன்:

ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா கூறியதாவது:- பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது தொடர்பான கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு ஆணை எனக்கு இன்னும் வரவில்லை. அந்த உத்தரவு ஆணை வந்த பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்படும். ஆனால் மேல்முறையீடு செய்வது வழக்கமானது. குமாரசாமியின் உடல் நிலை குறித்து பலர் கேட்கின்றனர். அவர் நலமாக இருக்கிறார். விரைவில் அவர் தனது பணியை தொடங்குவார். நானும் நலமாக இருக்கிறேன். என் மூச்சு இருக்கும்வரை மக்கள் பணியாற்றுவேன். ஹாசன் மாவட்டத்திற்கு சொந்த விஷமாக வந்தேன். இது அரசியல் பயணம் இல்லை. காவிரி நீர் பங்கீடுவது தொடர்பான விவகாரத்தில் மாநில அரசு கவனமாக செயல்படவேண்டும்.

கர்நாடக விவசாயிகளின் வாழ்வாதாரம்தான் முக்கியம். 2 தேசிய கட்சிகளும் காவிரி விவகாரத்தில் நாடகமாடி வருகிறது. மத்திய, மாநில அரசு எடுக்கும் அனைத்து முடிவும் தமிழகத்திற்கு சாதகமாகத்தான் அமைகிறது. காவிரி நீர் தொடர்பாக டி.கே.சிவக்குமார் முரண்பட்ட கருத்து கூறி வருகிறார். டி.கே.சிவக்குமார் தான் பேசியதை சற்று திரும்பி பார்க்கவேண்டும். கர்நாடக விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இந்த காவிரி விவகாரத்தில் ஜனதா தளம் (எஸ்) துணையாக நின்று போராடும். எனது உயிர் மூச்சு இருக்கும்வரை விவசாயிகளுக்காக நான் போராட தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story