ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 'ஐபோன்', 'ஸ்மார்ட் வாட்ச்', 'ஏர்பட்ஸ்' அறிமுகம்


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன், ஸ்மார்ட் வாட்ச், ஏர்பட்ஸ் அறிமுகம்
x

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை சிஇஒ டிம் குக் இன்று வெளியிட்டார்.

கலிபோர்னியா,

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் புதிய சாதனங்களை அறிமுகம் செய்துவைத்தார்.

புதிய ஐபோன்கள்;

ஐபோன் 14 மொத்தம் 5 வகைகளாக வெளியாகியுள்ளது. அதன் பெயர் மற்றும் விலை பின் வருமாறு:

ஐபோன் 14 - துவக்க விலை ரூ.79 ஆயிரத்து 900

ஐபோன் 14 பிளஸ் - துவக்க விலை ரூ. 89 ஆயிரத்து 900

ஐபோன் 14 புரோ - துவக்க விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900

ஐபோன் 14 புரோ மேக்ஸ் - துவக்க விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900

ஐபோன் 14 ரக செல்போன்களின் விலை வரும் 16-ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் எஸ்.இ. ரகம்;

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் எஸ்.இ.ரகத்தில் மொத்தம் 8 நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் வரும் 16-ம் தேதி முதல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச்களின் விலை ரூ. 29 ஆயிரத்து 900 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 8 ரகம்;

அதேபோல் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 8 ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீரிஸ் 8 ரக ஸ்மார்ட் வாட்ச்களின் ஆரம்ப விலை ரூ. 45 ஆயிரத்து 900 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்பட்ஸ்;

அதேபோல், ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பட்ஸ் சாதனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் ஏர்பட்ஸ் ப்ரோ 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏர்பட்ஸ்களில் ஆரம்ப விலை ரூ 26 ஆயிரத்து 900 என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story