இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று திறப்பு!


இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று திறப்பு!
x

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று திறக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பை,

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் எலக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவை உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் இதனை ஆன்லைன் மூலம் மட்டுமே பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என பிரத்யேக ஷோ ரூம் இல்லாத நிலையில் மும்பையில் ஆப்பிள் விற்பனை நிலையம் தொடங்க திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் மும்பையில் திறக்கப்பட உள்ள ரீடைல் ஸ்டோரின் வெளித்தோற்றத்தையும் தனது இணையதளத்தில் ஆப்பிள் நிறுவனம் பகிர்ந்தது.

இந்தநிலையில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று திறக்கப்படுகிறது. இந்த விற்பனை நிலையத்திற்கு ஆப்பிள் பிகேசி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பங்கேற்க ஆப்பிள் சி இ ஓ டிம் குக் இந்தியா வந்துள்ளார். ஏப்ரல் 20-ம் தேதி டெல்லியில் 2-வது நேரடி விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story