குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 58.68 சதவீத வாக்குகள் பதிவு


குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 58.68 சதவீத வாக்குகள் பதிவு
x

Image Courtesy: PTI

தினத்தந்தி 5 Dec 2022 1:06 PM GMT (Updated: 5 Dec 2022 1:22 PM GMT)

குஜராத் சட்டசபைக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

காந்தி நகர்,

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. 182 சட்டசபை தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 93 தொகுதிகளுக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து சென்றனர். மாலை 3 மணி வரை 50.51 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில், குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

குஜராத் சட்டசபை 2-ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 58.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அதிகரித்துள்ளது.


Next Story