ஏப்ரல்-மே மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்


ஏப்ரல்-மே மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
x

கேரள மாநிலத்தில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாக கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் கடந்த மாதமே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் மாவட்டங்களின் விவரங்களை தெரிவித்து, அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் நடப்பு மாதத்தில் நாட்டிலேயே அதிகபட்ச வெப்பம் கேரளாவில் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story