மதுபோதையில் தகராறுதொழிலாளியை தாக்கி கொன்ற நண்பர் கைது


மதுபோதையில் தகராறுதொழிலாளியை தாக்கி கொன்ற நண்பர் கைது
x
தினத்தந்தி 21 April 2023 6:45 PM GMT (Updated: 21 April 2023 6:48 PM GMT)

உடுப்பியில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கி கொன்ற அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

உடுப்பியில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கி கொன்ற அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

உடுப்பி மாவட்டம் காபு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பித்ரோடி பகுதியைச் சேர்ந்தவர் தயானந்தா(வயது 40). இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த பரத். இவர்கள் இருவரும் கூலி தொழிலாளிகள் ஆவார்கள். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் பித்ரோடி அருகே பழைய சிண்டிகேட் வங்கி அருகில் உள்ள மதுபான பாரில் மது குடித்தனர். பின்னர் மதுக்கடையை விட்டு வெளியே வந்த அவர்கள் 2பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த பரத், தயானந்தாவை சரமாரியாக தாக்கினார். முகம், கழுத்துப் பகுதியில் சரமாரியாக குத்தினார். மேலும் தலையில் சரமாரியாக தாக்கினார்.

கைது

இதில் படுகாயம் அடைந்த தயானந்தா உயிருக்கு போராடினார். அதைப்பார்த்ததும் பரத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதையடுத்து அங்கிருந்தவர்கள் தயானந்தாவை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே தயானந்தா இறந்துவிட்டார். இதையடுத்து இதுபற்றி காபு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து தயானந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பரத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story