காஷ்மீர் எல்லையில் ராணுவ தளபதி ஆய்வு


காஷ்மீர் எல்லையில் ராணுவ தளபதி ஆய்வு
x

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச், ரஜோரிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஜம்மு,

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச், ரஜோரிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது அவர் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதிக்கு சென்று படைகளின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்.மேலும் அங்கு பணியில் உள்ள அனைத்து மட்டத்திலான அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது எல்லையை பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலை பாராட்டிய அவர், தொடர்ந்து திறம்பட பணியாற்றுமாறு ஊக்கப்படுத்தினார். இந்த பயணத்துக்கு இடையே நக்ரோட்டாவில் உள்ள ஒயிட் நைட் படைப்பிரிவின் தலைமை அலுவலகத்துக்கும் மனோஜ் பாண்டே சென்றார். அங்கும் அவர் படைப்பிரிவின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். ராணுவ தளபதியின் பயணத்தையொட்டி எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.


Next Story