பெங்களூரு - கன்னியாகுமரி இடையே 650 கிலோ மீட்டர் தூரத்தை 36 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்த ராணுவ வீரர்..!


பெங்களூரு - கன்னியாகுமரி இடையே 650 கிலோ மீட்டர் தூரத்தை 36 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்த ராணுவ வீரர்..!
x

கோப்புப்படம்

ராணுவ வீரர் ஒருவர் பெங்களூரு - கன்னியாகுமரி இடையே 650 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் 36 மணி நேரத்தில் கடந்துள்ளார்.

பெங்களூரு,

ராணுவ வீரரான ராகுல் குமார் என்பவர் பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் பயணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் கடந்த 8-ந்தேதி காலை பெங்களூருவில் இருந்து சைக்கிளில் புறப்பட்டார். பின்னர் அவர் 9-ந்தேதி மாலை கன்னியாகுமரியை சென்றடைந்தார்.

அவர் 650 கிலோ மீட்டர் தூரத்தை 36 மணி நேரத்தில் கடந்துள்ளார். அதிவேக தனிநபர் சைக்கிளிங் (ஆண்கள்) பிரிவில் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க இந்த முயற்சியை அவர் மேற்கொண்டார். பெங்களூருவில் இருந்து ஓசூர், சேலம், மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு சென்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'பிட் இந்தியா' இயக்கத்தை முன்னிறுத்தி இந்த 650 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் நடத்தப்பட்டது. இந்த பயணத்தின்போது மோசமான வானிலையை சமாளிக்க நேர்ந்தது. மதுரை பகுதியில் சென்றபோது கடுமையான மழை மற்றும் காற்றை சந்திக்க வேண்டி இருந்தது என்றார்.


Next Story