வாகன திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது
பெங்களூருவில் வாகன திருட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ௨ பேர் கைதானார்கள்.
பெங்களூரு:
பெங்களூரு பண்டேபாளையா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ஸ்கூட்டருக்கு ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அப்போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் தமிழ்நாடு ஓசூரை சேர்ந்த கலீல் மற்றும் அவரது நண்பர் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதனால் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story