போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.5 கோடி கடன் பெற்று மோசடி


போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.5 கோடி கடன் பெற்று மோசடி
x

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.5 கோடி கடன் பெற்று மோசடி செய்த தொழில் அதிபர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.5 கோடி கடன் பெற்று மோசடி செய்த தொழில் அதிபர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.5 கோடி கடன்

பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் கவுடா. தொழில்அதிபர். இவருக்கு சொந்தமாக பெங்களூரு புறநகர் பகுதியில் நிலம் உள்ளது. அவருக்கு தொழில் தொடர்பாக கடன் தேவைப்பட்டது. அதற்காக அவர் பெங்களூரு கே.ஜி. சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்தார். மேலும் அதற்காக புறநகர் பகுதியில் உள்ள நிலம் மற்றும் வீட்டின் பத்திரங்களை அடமானமாக வைத்தார். அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள், சுரேஷ் கவுடாவுக்கு ரூ.5 கோடி கடன் கொடுத்தனர். இந்த நிலையில் வங்கியில் கடன் பெற்றவர்களின் ஆவணங்களை, வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சுரேஷ் கவுடாவின் ஆவணங்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

8 பேர் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து அடமானம் வைக்கப்பட்ட வீட்டை, அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த இடத்தில் வீடு எதுவும் இல்லை என்பதும், வெறும் நிலம் மட்டுமே உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து வங்கி அதிகாரிகள், உப்பார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், போலி ஆவணங்களை வங்கியில் கொடுத்து கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் சுரேஷ் கவுடாவுக்கு கடன் பெற்று கொடுப்பதில் வக்கீல்கள் 2 பேர் உள்பட 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொழில்அதிபர் சுரேஷ் கவுடா உள்பட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story