டெல்லி அரசு திட்டம் மூலம் அயோத்தி செல்லும் பக்தர்களுடன் கெஜ்ரிவால் சந்திப்பு


டெல்லி அரசு திட்டம் மூலம் அயோத்தி செல்லும் பக்தர்களுடன் கெஜ்ரிவால் சந்திப்பு
x

Image Courtacy: CMODelhiTwitter

டெல்லி அரசு திட்டம் மூலம் அயோத்தி செல்லும் பக்தர்களுடன் கெஜ்ரிவால் கலந்துரையாடினார். அவர்களுடன் பஜனை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்

புதுடெல்லி,

நாட்டின் பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு புனித யாத்திரை அழைத்து செல்லும் திட்டத்தை டெல்லி அரசு செயல்படுத்தி வருகிறது. 'முதல்-மந்திரி தீர்த்த யாத்திரை யோஜனா' என்ற இந்த திட்டத்தில் புனித யாத்திரைக்கான அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு குழுவினர் நேற்று அயோத்தி புறப்பட்டு சென்றனர். முன்னதாக அவர்கள் சிறப்பு பஜனை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இதில் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். பின்னர் அந்த பக்தர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில், 'முதல்-மந்திரி தீர்த்த யாத்திரை யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை 75 ஆயிரம் மூத்த குடிமக்கள் ஆன்மிக தலங்களுக்கு சென்று வந்துள்ளனர். இதில் 4 ஆயிரம் பேர் அயோத்தியை தரிசித்து உள்ளனர்' என்று கூறினார்.

மேலும் அவர், 'இந்த ஒட்டுமொத்த பயணத்தையும் உங்கள் வாழ்நாளில் மறக்கமாட்டீர்கள். உங்களுக்கான அனைத்து வசதிகளையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம். இதில் ஏதாவது குறைபாடு இருந்தால் முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறன். அவற்றை எதிர்காலத்தில் நாங்கள் நிவர்த்தி செய்வோம்' என தெரிவித்தார்.


Next Story