ஆம் ஆத்மி துவக்க தினம்: கட்சி தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து


ஆம் ஆத்மி துவக்க தினம்: கட்சி தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து
x

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. டெல்லியின் முதல்-மந்திரியாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார்.

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநில முதல்-மந்திரியாக பகவந்த் மான் செயல்பட்டு வருகிறார். இதன் மூலம் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் துவக்க தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஆம் ஆத்மி துவக்கப்பட்டுள்ளது. தற்போது ஆம் ஆத்மி கட்சி 11 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 12ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story