மேற்கு வங்காளத்தில் அசன்சோல்-பொகாரோ பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து


மேற்கு வங்காளத்தில் அசன்சோல்-பொகாரோ பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து
x

மேற்கு வங்காளத்தில் அசன்சோல்-பொகாரோ பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.



கொல்கத்தா,



மேற்கு வங்காளத்தின் அசன்சோல் ரெயில்வே நிலையத்தில் இருந்து பொகாரோ நோக்கி புறப்பட்டு சென்ற அசன்சோல்-பொகாரோ ரெயில், திடீரென நடு வழியில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

இதுபற்றி அசன்சோல் ரெயில்வே பிரிவு மண்டல ரெயில்வே மேலாளர் பரமானந்த் சர்மா கூறும்போது, தடம் புரண்ட பெட்டியில் 30 முதல் 40 பேர் வரை இருந்தனர். ஆனால், யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளான நிலையில், சிறிது நேரத்திற்கு சில எக்ஸ்பிரஸ் ரெயில்களை நிறுத்த வேண்டியிருந்தது. ஆனால் தீவிர பாதிப்பு எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story