ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்


ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்
x

முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தை பிடித்தார்.

புதுடெல்லி,

அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் கவுதம் அதானி, 111 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான மதிப்புடன், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

முதல் இடத்தில் இருந்த, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 109 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் 11 வது இடத்தை அதானி பிடித்துள்ளார். 12 வது இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார்.

1 More update

Next Story