அசாம்: போலீசார் கைப்பற்றிய பலவகை போதை பொருட்கள் அழிப்பு
அசாமில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தில் அதிக அளவிலான பலவகை போதை பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன.
கவுகாத்தி,
போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதை பொருள் கடத்தலுக்கான சர்வதேச எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 26ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு, அசாமில் அதிக அளவிலான பலவகை போதை பொருட்களை பல்வேறு காலகட்டங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தில் நேற்று அழிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 1.642 கிலோ ஹெராயின், 6.933 கிலோ பிரவுன் சுகர், 35.740 கிலோ கஞ்சா, 7,948 இருமல் மருந்து பாட்டில்கள், 1,63,880 மருந்து மாத்திரைகள், 202 கிராம் மார்பின் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ரூ.15 கோடி மதிப்பிலான அனைத்து போதை பொருட்களும் பொது மக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன. இதனை நகாவன் நகர எஸ்.பி. லீனா டோலே தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story