அசாம்: கசிரங்கா தேசிய பூங்காவை சுற்றிப்பார்த்த ஜி20 பிரதிநிதிகள்


அசாம்: கசிரங்கா தேசிய பூங்காவை சுற்றிப்பார்த்த ஜி20 பிரதிநிதிகள்
x

கவுகாத்தி நகரில் ஜி20 பிரதிநிதிகள் பங்குபெறும், ‘நிலையான நிதி செயற்குழு கூட்டம்’ நடைபெற உள்ளது.

திஸ்பூர்,

ஜி20 நாடுகளின் அமைப்பின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு சுழற்சி முறையில் வகித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனை முன்னிட்டு ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜி20-க்கான இந்தியாவின் கருப்பொருள் 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதாகும். ஜி20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அசாம் மாநிலம் கவுகாத்தி மற்றும் திப்ருகார் நகரங்களில் 5 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக பிப்ரவரி 2(நாளை) மற்றும் 3 ஆகிய தேதிகளில் கவுகாத்தி நகரில் ஜி20 பிரதிநிதிகள் பங்குபெறும், 'நிலையான நிதி செயற்குழு கூட்டம்' நடைபெற உள்ளது.

இதற்காக அசாம் மாநிலத்திற்கு ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள கசிரங்கா தேசிய பூங்காவிற்குச் சென்று சுற்றிப்பார்த்தனர். அங்கு ஜிப்களில் பயணம் செய்த பிரதிநிதிகள், வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சூழல் மேம்பாட்டிற்காக கசிரங்கா தேசிய பூங்கா நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நேரில் கேட்டறிந்தனர்.



Next Story