அசாம்: முதல்-மந்திரி தலைமையில் ஹர்கர் திரங்கா பேரணி


அசாம்:  முதல்-மந்திரி தலைமையில் ஹர்கர் திரங்கா பேரணி
x

அசாம் முதல்-மந்திரி முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் கவுகாத்தியில் ஹர்கர் திரங்கா பேரணி இன்று நடைபெற்றது.

கவுகாத்தி,



நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. இதனை தொடர்ந்து டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து மற்றும் சோதனை பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

நாட்டில் ஓராண்டு கால சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஹர்கர் திரங்கா என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, இன்று முதல் வரும் 15-ந்தேதி வரை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் தேசிய கொடியை ஏற்றும்படி கேட்டு கொண்டுள்ளது.

இதனை முன்னிட்டு அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் அசாமின் கவுகாத்தி நகரில் இன்று ஹர்கர் திரங்கா பேரணி நடந்தது. இதில், பள்ளி மாணவ மாணவிகள், மகளிர், ஆடவர் உள்ளிட்டோர் தேசிய கொடிகளை ஏந்தியபடி ஊர்வலம் சென்றனர்.

இதுபற்றி அசாம் முதல்-மந்திரி செய்தியாளர்களிடம் பேசும்போது, கவுகாத்தி நகரில் இன்று காலையில் நடைபயிற்சியின்போது, தேசிய கொடிகளை ஏந்தி சென்றுள்ளோம். நாங்கள் அனைவரும் அதில் பங்கு பெற்றுள்ளோம். ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றும்படி அசாம் மக்களை இந்த தருணத்தில் கேட்டு கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.


Next Story