அசாமில் நடப்பு ஆண்டில் 300 மதரசாக்களை மூடுவேன்: முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா


அசாமில் நடப்பு ஆண்டில் 300 மதரசாக்களை மூடுவேன்: முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா
x

அசாமில் நடப்பு ஆண்டில் 300 மதரசாக்களை மூடுவேன் என்று முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பேசியுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில், கரீம்நகரில் நடந்த பொது கூட்டத்தில் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், அசாமில் லவ் ஜிகாத் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக உழைத்து கொண்டிருக்கிறோம். அசாமில் இருந்து மதரசாக்களை மூடும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

நான் முதல்-மந்திரியான பின்னர் அசாமில் இதுவரை 600 மதரசாக்களை மூடியுள்ளேன். ஓவைசிக்கு நான் கூறி கொள்ள விரும்புவது என்னவெனில், அசாமில் நடப்பு ஆண்டில் 300 மதரசாக்களை மூடுவேன் என அவர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பேரணி ஒன்றில் பேசும்போது, 600 மதரசாக்களை மூடியுள்ளேன் என கூறியதுடன், எல்லா மதரசாக்களையும் மூடி விடும் நோக்குடன் இருக்கிறேன்.

அதற்கு பதிலாக கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் பல்கலை கழகங்களை கட்டுவதற்கு விரும்புகிறேன் என கூறினார். வங்காளதேச மக்கள் அசாமுக்கு வந்து, நமது நாகரீகம் மற்றும் கலாசாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர் என்றும் அவர் அப்போது கூறினார்.


Next Story