ஒடிசாவில் 5 வீடுகள், 21 மனைகளை வாங்கி குவித்த தாசில்தார் கைது


ஒடிசாவில் 5 வீடுகள், 21 மனைகளை வாங்கி குவித்த தாசில்தார் கைது
x

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளதாக புகார்கள் குவிந்தன.

கட்டாக்,

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள தங்கர்பாலி நகரில் கூடுதல் தாசில்தாராக பணி புரிபவர் குலாமணி படேல்.

இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளதாக புகார்கள் குவிந்தன.அதையடுத்து, அவரது வீடு உள்பட 8 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அவர், வருமானத்தைவிட 253 மடங்கு அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சேர்த்திருப்பதும், 5 வீடுகள், 21 மனைகளை வாங்கி குவித்திருப்பதும் தெரியவந்தன. அதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story