உதவி கலெக்டரான, குழந்தை நட்சத்திரம்


உதவி கலெக்டரான, குழந்தை நட்சத்திரம்
x

கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மண்டியா மாவட்ட உதவி கலெக்டராக பொறுப்பேற்றார்.

மண்டியா-

மண்டியா உதவி கலெக்டராக பணியாற்றி வருபவர் கீர்த்தனா. இவர், கடந்த அக்டோபர் மாதம் முதல் உதவி கலெக்டராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இதில் சுவாரசியம் என்னவென்றால் உதவி கலெக்டர் கீர்த்தனா, கன்னட சினிமாவில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 4 வயது முதல் கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், கன்னட திரையுலகின் உச்ச நடிகர்களான விஷ்ணுவர்தன், அம்பரீஷ், சிவராஜ்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அதன்படி அவர் சுமார் கன்னட சினிமாவில் 32 படங்கள், 48 தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இதையடுத்து வளர்ந்தபின் அவரது தந்தையின் விருப்பப்படி கீர்த்தனா படித்து 2011-ம் ஆண்டு கே.ஏ.எஸ். அதிகாரியானார். பின்னர் 2022-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி, ஆறாவது முயற்சியில் 167-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். இதையடுத்து பீதரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி பயிற்சி முடித்து தற்போது மண்டியா உதவி கலெக்டராக கீர்த்தனா பணியாற்றி வருகிறார். இவருக்கு கன்னட திரையுலகினர், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story