திரிவேணி சங்கமம் கும்பமேளா விழாவில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளில் குறைகள் இருக்ககூடாது


திரிவேணி சங்கமம் கும்பமேளா விழாவில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளில் குறைகள் இருக்ககூடாது
x
தினத்தந்தி 18 Sept 2022 12:30 AM IST (Updated: 18 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

திரிவேணி சங்கமம் கும்பமேளா விழாவில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளில் குறைகள் இருக்ககூடாது என மண்டியா மாவட்ட பொறுப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மண்டியா;


மண்டியா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழா, திரிவேணி சங்கமம் கும்பமேளா ஆகிய நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் மண்டியா மாவட்ட பொறுப்பு செயலாளர் ெஜயராம் ராய்பூர் தலைமையில் நடந்தது. இதில் அவர், அதிகாரிகளிடம் கூறியதாவது:-

ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழாவில் அனைத்து தாலுகா மக்களும் கலந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். திரிவேணி சங்கமம் கும்பமேளா அக்டோபர் மாதம் 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பெருமளவிலான மக்கள் பங்கேற்பார்கள்.

அதனால் விழாவில் அடிப்படை வசதிகளில் குறைகள் இருக்ககூடாது. குடிநீர், உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

சாதுக்கள் மற்றும் துறவிகளுக்கு தனித்தனியாக தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் துணை கலெக்டர் எச்.எல்.நாகராஜூ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story