சிவமொக்காவில் துணிகரம்: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


சிவமொக்காவில் துணிகரம்: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. பல லட்சம் ரூபாய் தப்பியது.

சிவமொக்கா:

சிவமொக்கா அருகே பத்ராவதி சாலையில் மாச்சேனஹள்ளி பகுதியில் தொழிற்பேட்டை அருகே கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு இரவு நேர காவலாளி யாரும் இல்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த மர்மநபர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியவில்லை என தெரிகிறது. இதனால், மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்த நிலையில், நேற்று காலை காவலாளி வந்ததும் இதுபற்றி சிவமொக்கா புறநகர் போலீசாருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் தப்பியது. இரவு நேர காவலாளி இல்லை என்பதை நன்கு அறிந்த மர்மநபர்களே இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story